ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாமா என படக்குழு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன்-2. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழு, பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.

தொடரும் தடை

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து காரணமாக தடைபட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டு நிற்கிறது. இதனிடையே, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, எடிட்டிங் பணிகள் தொடங்கப்பட்டன.

படக்குழு யோசனை

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே சுமார் 5 மணி நேரம் ஓடியதாகவும், அதை பார்த்து இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் வியப்படைந்ததாகவும் கூறப்படுகிறது. அனைத்தும் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகள் என்பதால், அதனை எடிட் செய்யாமல் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாமா என ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here