லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த கதையில் தற்போது கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய படம்

கமல்ஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை முடித்த பின்னர் அந்த கதைக்கான வேலைகளை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்.

திருப்தி இல்லை

கதையை முடித்து அதை ரஜினியிடம் சொன்ன போது அதில் அவருக்கு முழுமையான திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று குழம்பிப் போன லோகேஷிடம், அந்த கதையில் தானே நடிப்பதாக கமல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் கதையில் சில மாற்றங்களை செய்ய லோகேஷ் ஆயத்தமாகியுள்ளார்.

கமல் ரசிகர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் மிகப்பெரிய ரசிகர். அவரின் விருமாண்டி மற்றும் நம்மவர் ஆகிய படங்களின் கதையை முன்மாதிரியாக வைத்துதான் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களை உருவாக்கியதாக லோகேஷ் வெளிப்படையாகவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here