ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்

இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கன மன பாடலை இயற்றியவரும் இவரே. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877-ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட வியங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.

உபுல் சந்தன பிறந்த தினம்

இலங்கை அணியின் முன்னாள்சுழல் பந்து வீச்சாளர் உபுல் சந்தனவின் 44வது பிறந்த தினமாகும். இலங்கை அணிக்காக 1994 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் 16 டெஸ்ட் போட்டிகளிலும் 147 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

நிகழ்வுகள்    

1697: சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள அரண்மனை தீவிபத்தினால் அழிந்தது. இதற்கு பதிலகா 18 ஆம் நூற்றாண்டில் மற்றொரு அரண்மனை நிர்மாணிக்கப்பட்டது.

1915: ஜேர்மன் நீர்மூழ்கித் தாக்குதலில் அமெரிக்க கப்பலொன்று மூழ்கியது இதனால் 1198 பேர் உயிரிழந்தனர்.

1946: சோனி நிறுவனம் டோக்கியோ டெலிகொம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் எனும் பெயரில் 20 ஊழியர்களுடன் ஆரம்பிக்ப்பட்டது.

1948: ஐரோப்பிய கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது.

1960: அமெரிக்க யுத்த விமான விமானி கெரி பொவர்ஸ் தனது நாட்டில் கைதியாக்கப்பட்டுள்ளதாக சோவியத் யூனியன் தலைவர் நிகிட்டா குருஷேவ் அறிவித்தார்.

1999: யூகோஸ்லாவியாவில் குண்டுவீச்சு, விமானங்களின் தாக்குதலில் சீனத் தூதரகத்திலிருந்த 3 சீனப்பிரஜைகள் பலி. 20 பேர் காயம்.

1999: கினியா பிஸு ஜனாதிபதி ஜோவா வியெரா இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

2000: ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதியேற்றார்.

2002: சீன விமானமொன்று மஞ்சள் கடலில் விழுந்ததால் 112 பேர் பலி.

2008: ரஷ்ய ஜனாதிபதியாக திமித்ரி மெத்வதேவ் பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here