நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விஜய் ரசிகர்கள் உருவாக்கிய #NanbarAjith என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

டிவிட்டரில் டிரெண்ட்

நடிகர் அஜித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உட்பட பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்காக #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அஜித் ரசிகர்கள், அதனை தேசிய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

அஜித்துக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து கூறி வரும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் ரசிகர்களும் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர். 

நண்பர் அஜித்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ‘மாஸ்டர்’ திரைப்பட  இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் கோட் சூட்டில் வந்திருந்தார். நண்பர் அஜித்தைப்போல் வரலாம்னு தான் கோட் சூட்ல வந்தேன் என விஜய் கூறியிருந்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here