அன்றாட வாழ்வில் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக உள்ளது. இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அது மிகப்பெரும் பிரச்சனையாக வடிவம் எடுத்துள்ள நிலையில், நாம் முழுமுதற்கடவுளாம் பிள்ளையாரை வணங்கினால் பிரச்சனைகள் அகலும். பொருளாதாரம் மட்டுமல்ல தொழில், பணம், ஆரோக்கியம் என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பிள்ளையாரே துணை.

சக்தி வாய்ந்த அரச இலை

வினைகள் தீர்க்கும் விநாயகருக்கு உகந்தது அரச இலைகள். அவர் அமர்ந்து அருள் புரியும் மரமே அரசமரம் தான். நம்முடைய பிரச்சனைகள் யாவும் தீர பிள்ளையார் வீற்றிருக்கும் அரச மரத்து இலைகள் 5 மட்டும் போதும். அவ்வளவு சக்தி வாய்ந்தவை இந்த அரச இலைகள்.

பிரச்சனைகள் தீரும்

சக்தியின் மைந்தன் விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் மரங்களில் அரச மரத்திற்கு கூடுதல் சிறப்பு உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதுக்குள் அரச இலைகள் 5ஐ பறித்து வந்து, மஞ்சள் கலந்த நீரில் அலசி உலர வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஐந்து அரச இலைகளையும் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி வைத்து, அதன்மேல் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். அதோடு ஒரு மஞ்சள் கிழங்கையும் சேர்த்து ஒரு நூலால் கட்டிக்கொள்ளுங்கள்.

மந்திரங்கள்

பிறகு வீட்டில் உள்ள பித்தளைச்சொம்பு,  செப்புச்சொம்பு அல்லது ஒரு மண்பானை இதில் ஏதேனும் ஒன்றை எடுத்து அதில் பச்சை அரிசியை நிரப்பி அதன்மேல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அரச இலை முடிச்சை வைத்து பூஜை அறையில் உள்ள விநாயகரை வணங்குங்கள். அப்போது முடிந்தால் விநாயகருக்கு உகந்த உங்களுக்கு தெரிந்த மந்திரங்களைச் சொல்லுங்கள்.

வேண்டிய வரம் கிடைக்கும்

இவ்வாறு தொடர்ந்து 21 வாரங்கள் வழிபட வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரச இலை உள்ளிட்ட பொருட்களை மாற்றி அதில் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போய் பிள்ளையார் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இப்படி மனதில் பக்தியோடு இப்பரிகார பூஜையை செய்துவந்தால் கேட்கும் வரம் யாவும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here