அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
வலிமை
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அஜித் வலியுறுத்தல்
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து, படப்பிடிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஊழியர்களின் நலன் கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் என போனி கபூருக்கு அஜித் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50% படப்பிடிப்பு நிறைவு
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை எடுத்தது போல், தெலுங்கிலும் வக்கீல் சாப் என்கிற பெயரில் திரைப்படம் உருவாகி வருவதாக தெரிவித்தார். மேலும் அஜித் நடித்து வரும் வலிமை படம் மிகப்பெரிய ஆக்ஷன் படம் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.