பிரபல இயக்குனர் ராஜமெளலி இயக்கும் RRR படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவார் என கூறப்படுகிறது.

வரலாற்றுப் படம்

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி, பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர்கள் ராம் சரண் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து RRR என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வம்

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது.

ரகுல் ப்ரீத் சிங்

இந்நிலையில், RRR படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவார் எனக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் உச்ச நடிகையான ரகுல் ப்ரீத் சிங் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறாரா..? என அனைவரும் ஷாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here