நடிகர் விஜயின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காஷ்மீர் பகுதிகளில் 2 மாதங்கள் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. லியோ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

வித்தியாசமான கதைகள்

இந்நிலையில், நடிகர் விஜயின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இயக்க உள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பார் என்றும் கூறப்படுகின்றது. வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் வெங்கட் பிரபு, நடிகர் அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here