பூவே உனக்காக படத்தில் நடித்த அஞ்சு அரவிந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

காணாமல் போன அஞ்சு

1995 ஆம் ஆண்டு அக்ஷரம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் அஞ்சு அரவிந்த். விஜயுடன் இணைந்து நடித்த ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பிறகு எனக்கு ஒரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ்மோர், உதவிக்கு வரலாமா, உன்னருகே நானிருந்தால், வானத்தைப் போல உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் தொடர்ந்து மலையாளத்தில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த அஞ்சு, தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும், சீரியல்களிலும் நடித்து வந்தார்.

மீண்டும் டிரெண்டிங்

பரதநாட்டிய கலைஞரான இவர், தற்போது பல குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு வினை சந்திரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட அஞ்சுவிற்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வரும் அஞ்சு மலையாளத்தில் மட்டும் 35 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளார். விஜயின் கெரியருக்கே முக்கியமான திரைப்படமாக அமைந்த பூவே உனக்காக படத்தில் நடித்த அஞ்சு, தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , ஆளே காணாமல் போய்விட்டார். இவரை பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில், தற்போது இன்ஸ்டாவில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்ததன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கண்ணில் சிக்கியுள்ளார். மகளுடன் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here