சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கதைக்கு முக்கியத்துவம்

திரைப்படங்களைக் காண ரசிகர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகின்றார்களோ, அதே அளவிற்கு சீரியல்கள் பார்க்கவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சன் டிவி, விஜய் டிவி என்று முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. சீரியல்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின், கதைக்களத்தை பொறுத்து ரசிகர்கள் அந்த தொடரின் வெற்றியை நிர்ணயிக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடருக்கும், இனியா தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

டாப் 5 சீரியல்கள்

கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் பல மாற்றங்கள் இருந்ததால் டாப் டிஆர்பியில் இருந்து வெளியேறி உள்ளது. அது மட்டும் இல்லாமல் தற்போது டிஆர்பியில் முன்னணியில் உள்ள ஐந்து சீரியல்களின் பெயரும் வெளியாகி உள்ளது. நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர் தற்போது டிஆர்பிஎல் முதலிடத்தை பெற்றுள்ளது. இனியா தொடர் இரண்டாம் இடத்தையும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா 2 தொடர் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் சுசித்ரா ஷெட்டி, சதீஷ்குமார், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரும் இடம்பெற்றுள்ளது. அமானுஷ்ய திரில்லர் சீரியலான ‘மாரி’ தொடர் டிஆர்பி யில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆஷிகா படுகோன், ஆதர்ஷ், சோனா, சிவசுப்பிரமணியன், அபிதா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here