நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 58வது மலேசியா இன்விடேஷனல் ஏஜ் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்காக 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஸ்போர்ட்ஸ்சில் கவனம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மாதவன். ஆரம்ப காலத்தில் காதல், ஆக்சன், சென்டிமென்ட் என்று அனைத்து விதமான படங்களிலும் நடித்து வந்த மாதவன், தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில்வர் நடித்து வருகிறார். மேலும் சித்தார்த் மற்றும் நயன்தாராவுடன் டெஸ்ட் என் ஸ்போர்ட்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களாக இருக்கும் சமயத்திலேயே தனது பிள்ளைகளை சினிமாவுக்குள் என்ட்றி கொடுக்க வைக்கும் மற்ற நடிகர்களுக்கு மத்தியில், நடிகர் மாதவன் தனது மகனை நடிப்பில் ஆர்வம் செலுத்தவிடாமல் நாட்டுக்காக விளையாட்டில் கவனம் செலுத்த ஊக்குவித்து வருகிறார்.
பெருமை சேர்த்த மகன்
நீச்சல் வீரரான மாதவனின் மகன் வேதாந்த் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது 58வது MILO/MAS மலேசியா இன்விடேஷனல் ஏஜ் குழு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 5 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார். தங்கப் பதக்கங்களுடன் தேசியக் கொடியை கையில் ஏந்திப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, நடிகர் மாதவன் தனது சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் உள்ளிட்ட போட்டிகளில் வேதாந்த் தங்கம் வென்றுள்ளார். இந்தப் பதிவை பார்த்த பிரபலங்களும், மாதவனின் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மாதவனின் மகன் வேதாந்த் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல தங்க பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.