நடிகர் விமல் நடிப்பில் வெளியாக இருக்கும் குலசாமி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் இன்று மாலை ரிலீஸ் ஆக உள்ளது.

தாமதமான படங்கள்

2004 ஆம் ஆண்டு முதல் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஹீரோவாக இவர் நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதன்பிறகு களவாணி, தூங்கா நகரம், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால், அதன்பிறகு வெளியான பல படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இவரது நடிப்பில் மஞ்சள் குடை, லக்கி, எங்க பாட்டன் சொத்து, சண்டைக்காரி, குலசாமி உள்ளிட்ட படங்கள் தற்போது வெளியாவதில் தாமதமாகி வந்தது.

ரிலீஸ் அறிவிப்பு

இந்த நிலையில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘குலசாமி’ திரைப்படம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் குலசாமி திரைப்படத்தில், விமலுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். தனியா ஹோப் ஏற்கனவே தாராள பிரபு, தடம் சமீபத்தில் வெளியான கப்ஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். MIK புரொடக்ஷன் தயாரிப்பிலான படத்தை இயக்கியுள்ளார் சரவண சக்தி. டிரெய்லர் மற்றும் ஆடியோ இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here