மோகன் லால், திரிஷா இணைந்து நடிக்கும் ராம் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

குந்தவை திரிஷா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை திரிஷா, ஹிந்தி, கன்னடம், மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களாகவே இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2018ம் ஆண்டு வெளியான ’96’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை திரிஷா, பேட்ட படத்தில் நடித்திருந்தார். ஆனால் பேட்ட படத்திலும் இவரது கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று கூறலாம். அதன்பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். குந்தவையாக தனது அழகிலும், நடிப்பிலும் மிரட்டிய திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

மோகன் லாலுடன் ஜோடி

தற்போது விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் படத்தில் மோகன் லாலுடன் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா மருத்துவராக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. ஏற்கனவே இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனதை தொடர்ந்து, இந்த படமும் வெற்றி பெரும் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். கடைசியாக இவர் “hey jude” என்ற மலையாள படத்தில், நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து திரிஷா, தி ரோடு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here