சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படத்தை பாராட்டி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அதனை பாராட்டி டுவீட் செய்துள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

நடிகர் சசிகுமார், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம் மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மந்திரமூர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தது. தியேட்டர்களில் வெளியான இந்த திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் பாராட்டி டுவீட் செய்துள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

இதுதொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார். ஆர். மந்திரமூர்த்தி, தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here