கணவரை கேலி செய்த நபருக்கு தகுந்த பதில் கொடுத்துள்ளார் நடிகை நீலிமா இசை.

சின்னத்திரையில் பிரபலம்

தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா இசை, திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நீலிமா. அதன்பிறகு ஆசை, மெட்டிஒலி, கோலங்கள், கஸ்தூரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமே, தென்றல், வாணி ராணி, தொடர்களிலும் இவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது.

கவலை இல்லை

திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நீலிமா, எங்கு சென்றாலும் கணவர் குழந்தைகளுடன் குடும்பமாக செல்வது வழக்கம். அதேபோல் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிட்டாலும் தனது போட்டோசூட் புகைப்படங்கள் மட்டுமில்லாமல் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்ற புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருவார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நீலிமா இசை, தனது கணவரைப் பற்றி நெட்டிசன்கள் கேலி செய்ததை கூறி வருத்தமாக பேசியுள்ளார். அனைத்து புகைப்படங்களிலும் நரைத்த முடியுடன் இருக்கும் நீலிமாவின் கணவரை பார்த்து நெட்டிசன்கள் அது என்ன உங்க தாத்தாவா? அல்லது உங்க அப்பாவா? என்று கேட்டுள்ளனர். இதனால் கடுப்பான நீலிமா ராணி அதற்கு தகுந்த பதிலை கூறியுள்ளார். இதுகுறித்து நீலிமா இசை கூறுகையில், “என் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் தான், மற்றவர்களுக்காக டை அடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அவரும் விரும்பவில்லை, நானும் விரும்பவில்லை. ரியலாக எப்படி இருக்க முடியுமோ அப்படி தான் அவரும் இருக்கிறார். இதனால் யார் எந்த கருத்தை கூறினாலும், எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here