ஸ்ரீதேவி மறைந்து 5 ஆண்டுகள் ஆனதால் அவரது மகள் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
வெற்றி நாயகி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஸ்ரீதேவி, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை போன்ற எக்கச்சக்கமான ஹிட் படங்களை கொடுத்து, பிறகு பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1963 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ஸ்ரீதேவி 2018 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவு திரையுலக பிரபலங்களை மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
5 ஆண்டுகள் நிறைவு
பிப்ரவரி 24ஆம் தேதி அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அம்மா இப்போதும் அனைத்து இடங்களிலும் உன்னை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் உன்னை பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். எங்கு சென்றாலும், எதை செய்தாலும் அது துவங்குவதும் முடிவதும் உன்னால் தான்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஸ்ரீதேவி மறைந்து 5 ஆண்டுகள் ஆவதை அறிந்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் ஜான்வி கபூருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தமிழில் சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்ததும் அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதை தொடர்ந்து பல ஹிந்தி படங்களிலும் ஒப்பந்தாகியுள்ளார் நடிகை ஜான்வி கபூர். இதுவரை எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.