லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி காஷ்மீரில் இருந்த்து செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் இவரும் இணைந்துள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காஷ்மீரில் பிஸி ஷூட்டிங்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ் எஸ் லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஏற்கனவே இணைந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் படமாக அமைத்தது. தற்போது லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடப்பதால் பட குழுவினர் அனைவரும் காஷ்மீருக்குச் சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இணைந்தாரா அண்ணாச்சி

லியோ படத்தில் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ஷேர் செய்து இருந்தார். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் லெஜண்ட் அண்ணாச்சியும் லியோ படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறன்றனர். லியோ டீம் இருக்கும் காஷ்மீரில் லெஜண்ட் அண்ணாச்சியும் தங்கியிருப்பது பலருக்கும் சர்ப்ரைஸ்சாக அமைந்துள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குழு எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here