சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் பிரபல நடிகருடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
ஹிட் லிஸ்டில் துஷாரா
இயக்குநர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் துஷாரா. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் துஷாராவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததால் உடனே அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நடித்திருந்தார் துஷாரா. இந்த படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த நடிகை துஷாரா, தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்கின்றார். விரைவில் வெளியாக இருக்கும் இப்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
குழப்பத்தில் ரசிகர்கள்
துஷாரா விஜயன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு இவர் காதல் வயப்பட்டுள்ளாரா என்று ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஹரியுடன் இருக்கும் புகைப்படத்துடன் “ஹேப்பியஸ்ட் பர்த்டே மை ஹரி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பல கேள்விகளை எழுப்பி வருகிறது. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் ஜானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி. அதுமட்டுமில்லாமல் ரைட்டர் படத்திலும், நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நடித்துள்ளார். ஒன்றாக வேலை செய்திருப்பதால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் நிலவுகின்றது. இதுபற்றி துஷாரா எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.