நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷின் மனைவிக்கு நடந்த வளைகாப்பு விழாவில் திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். கடந்த 2020-ம் ஆண்டு மது என்பவரை ஆர்.கே. சுரேஷ் கரம் பிடித்தார். ஆர்.கே. சுரேஷ் – மது தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. முதல் வளைகாப்பு நிகழ்ச்சியை தடபுடலாக நடத்திய சுரேஷ், தனது மனைவிக்கு இரண்டாம் வளைகாப்பு விழாவையும் தடபுடலாக நடத்தி உள்ளார். சென்னையில் நடைபெற்ற நிழ்ச்சியில், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ஷங்கரின் மனைவி ஈஸ்வரி, நடிகர்கள் கௌதம் கார்த்திக், விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அர்ஜூன் சம்பத், கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.