திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா, சன்னி லியோன் என 4 முக்கிய கதாநாயகிகள் நடித்திருக்கும் திரைப்படங்கள் டிச., 30-ம் தேதி அன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது.

ரிலீஸ் பட்டியல்

வருகிற டிச.,30-ம் தேதி பத்து திரைப்படங்களுக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் ‘ராங்கி’, ‘டிரைவர் ஜமுனா’, ‘செம்பி’, ‘ஹோ மை கோஸ்ட்’, ‘அருவா சண்ட’, ‘டியர் டெத்’, ‘காலேஜ் ரோடு’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த படங்கள்

இந்தப் படங்களில் நான்கு படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக உள்ளன. திரிஷா நடித்துள்ள ‘ராங்கி’, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’, கோவை சரளா நடித்துள்ள ‘செம்பி’, சன்னி லியோன் நடித்துள்ள ‘ஹோ மை கோஸ்ட்’ ஆகிய படங்களாகும். நான்கு முக்கிய கதாநாயகிகளின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here