ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே முகேஷ் குமார் என்பவர் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட காவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி ஏன் முக கவசம் அணியாமல் வந்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் அடிதடியாக மாறிய நிலையில், முகேஷை கிழே தள்ளிய காவலர்கள் அவர் கழுத்தை காலால் மிதித்துள்ளனர். அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் அந்நாட்டு காவல்துறை அதிகாரியால் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானிலும் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.















































