தளபதி 65 படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.

தொடரும் கூட்டணி

விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் 2012ம் ஆண்டு வெளியான துப்பாகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் அதே கூட்டணியில் கத்தி, சர்கார் போன்ற படங்கள் வெளிவந்தன. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

தளபதி 65ல் மடோனா?

தளபதி 65 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் பணிகள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையில், இதில் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இதுபற்றிய உறுதியான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை. இசையமைப்பாளர் தமன் மட்டுமே தளபதி 65ல் ஒப்பந்தம் ஆகி இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

‘பிரேமம்’ புகழ்

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன், காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் கவண், பா பாண்டி, ஜீங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் மடோனா நடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here