சமீப காலமாகவே நடிகர் விஷால் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுடன் விஷால் செல்வதும், அவரை வீடியோ எடுப்பதை பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டு ஓடுவதும் வைரலானது. அதன்பின்னர் அது சித்தரிக்கப்பட்டு திட்டமிட்டே நகைச்சுவைக்காக அவ்வாறு எடுக்கப்பட்ட என விஷால் விளக்கம் அளித்தார். அதுபோல தற்போது டாஸ்மாக் பார் ஒன்றில் மதுவாங்க மதுபிரியர்கள் கூட்டமாக காத்திருக்கும் நிலையில் அங்கு வந்த விஷால் அவர்களை அடித்து விரட்டும் வீடியோ வைரலாகியுள்ளது. தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ரத்னம் படத்திற்காக போடப்பட்ட டாஸ்மாக் ஷெட்டில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதை விஷாலே அந்த வீடியோவில் சொல்லி அவர்களை அடித்து விரட்டுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here