தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தேமுதிக எனும் அரசியல் கட்சித் தலைவராகவும் திகழ்ந்தவர் விஜயகாந்த். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில தினங்களுக்கு மரணமடைந்தார். விஜயகாந்தின் மரணத்தை அறிந்த திரையுலகினர் பலர் அவரது நினைவிடத்திலும், இல்லத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று தனது தாயுடன் சென்று விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயார் இருப்பதாக கூறியிருக்கிறார்.