எந்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிளிமாஞ்சாரோ’ பாடலை கென்யா மக்கள் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட்

கடந்த 2010 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருனாஸ், தேவ தர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற எந்திரன் திரைப்படம் வசூலையும் வாரி குவித்தது.

வைரல் வீடியோ

இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக கென்யா சென்றுள்ள பாடகி சின்மயி, அங்குள்ள மாசாய் பழங்குடி மக்களுடன் இணைந்து ‘கிளிமாஞ்சாரோ’ பாடலை பாடி ஆடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here