சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்த பின்னர், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் சினிமாவில் நடித்து வந்தார். அமலா பால் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here