‘கோ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை கார்த்திகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறந்த நடிகை

80களின் காலக்கட்டத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா. ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். நடிகை ராதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கார்த்திகா ‘கோ’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கார்த்திகா நடித்தார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ‘கோ’ படத்தை தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் கார்த்திகா நடித்துள்ளார்.

திருமணம்?

இந்நிலையில் கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது வருங்கால கணவரை கட்டிப்பிடித்தபடி மோதிரம் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் அவரது வருங்கால கணவர் பற்றிய தகவலையும் தனது பதிவில் கார்த்திகா வெளியிடவில்லை. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here