ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. திரையரங்குகளில் இன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டைம் ட்ராவலை மையப்படுத்திய கேங்ஸ்டர் காமெடி படமாக ‘மார்க் ஆண்டனி’ உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படமும் அமைந்துள்ளதாக காலை முதல் ஆடியன்ஸின் ரியாக்சன் மூலமாக தெரிய வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் சிலுக்கு ஸ்மிதா காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here