தனது வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை தலா ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு வழங்கியுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வரவேற்பு

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘குஷி’. செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘குஷி’ திரைப்படம் இதுவரை ரூ.70 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

குவியும் வாழ்த்து

இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது வருமானத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலா ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன் என்றும் இந்த தொகை ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி, நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சொன்னது போன்று 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படன்ங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here