தமிழ் சினிமாவில் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.எஸ்.சிவாஜி.  அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜூடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் “தெய்வமே நீங்க எங்கேயே போய்ட்டீங்க” என்று ஆர்.எஸ்.சிவாஜி சொல்லும் டைலாக் இன்னும் டிரெண்டிங்கில் உள்ளது. காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ள ஆர்.எஸ்.சிவாஜி, சமீபத்தில் வெளியான சாய் பல்லவியின் கார்கி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், 66 வயதான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த நடிகர் ஆர்.எஸ். சிவாஜி, நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here