விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகு சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று ”கண்ணே கலைமானே”. இந்த தொடரில் நாயகனாக நடன இயக்குநர் நந்தா நடித்து வந்தார். ஆனால் திடீரென அவருக்கு பதிலாக ”தமிழும் சரஸ்வதியும்” சீரியல் நவீன் ராமாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வந்தன. பலரும் நந்தாவின் விலகலுக்கான காரணம் தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்து இருக்கிறார். அதில் ,”கண்ணே கலைமானே” சீரியலில் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்ட போது தனது காலில் அடிபட்டு தசைக் கிழிவு ஏற்பட்டதால் தன்னால் தொடர முடியவில்லை. எனவே தான் சீரியலில் இருந்து விலகினேன். விஜய் டிவி எனக்கு மிகுந்த சப்போர்ட் கொடுத்தார்கள். தற்போது புதிதாக வந்திருக்கும் நவீனுக்கும் நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இன்னும் இந்த சீரியலை 500 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக நீங்கள் நகர்த்திச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்””.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here