விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை கிரண் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இறுதிகட்டப் பணிகள்

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் விறுவிறுப்பாக நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இணைந்த பிரபலம்

இதையடுத்து நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், ‘லியோ’ படத்தில் இணைந்துள்ள பிரபலம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை கிரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனை அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here