ஷருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ‘ஹையோடா’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஜவான்’

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் அட்லீ, ‘ஜவான்’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வைரல்

‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘ஹையோடா’ பாடல் இன்று வெளியாகியது. அனிருத் மற்றும் பிரியா மலி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here