சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் 15 நொடிகளில் விற்றுத்தீர்ந்தன.

மிகுந்த எதிர்பார்ப்பு

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், இரண்டாவது பாடலான ‘ஹீக்கும்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி சீட்டு விற்பனை நேற்று மதியம் 1 மணிக்கு இணையத்தில் தொடங்கியது. 1000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், முன்பதிவு தொடங்கிய 15 நொடிகளிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here