மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வாழை’ திரைப்படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மிகப்பெரிய வெற்றி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

சிறந்த படைப்பு

‘மாமன்னன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் ‘வாழை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘வாழை’ திரைப்படத்தை பார்த்து வியந்த உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here