பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டன்ஸ்’. இப்படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற 28 ஆம் தேதி ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நடிகர் சந்தானம் பேசுகையில்; “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக ‘டிடி ரிட்டன்ஸ்’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். ‘டிடி ரிட்டன்ஸ்’ மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here