ஹரிஷ் கல்யான், இவானா நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஜி.எம்’ படத்தில் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

‘எல்.ஜி.எம்’

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல் கதை

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிறப்பு தோற்றம்

இந்நிலையில், ‘எல்.ஜி.எம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தோனியும் நடித்துள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here