பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு ரீமேக்

கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கி நடித்த ‘வினோதய சித்தம்’ திரைப்படம், நேரடியாக OTT தளத்தில் வெளியானது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை தற்போது சமுத்திரகனி இயக்கி வருகிறார். வருகிற 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஒரு கோடி?

பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘மை டியர் மார்கண்டேயா’ என்ற முதல் பாடலும் வெளியானது. இந்த ஒரு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடனமாடியுள்ளார். இதற்காக அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here