மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் மாவீரன். ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்; “சிவகார்த்திகேயனிடம் நடிகராக நான் பழகவில்லை. ரொம்பவும் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. சிவகார்த்திகேயன் எத்தனை ஆண்டுகளாக இப்படி ஒழுக்கமாக இருக்கிறார் என தெரியவில்லை. இதற்காகவே அவருக்கு விருது கொடுக்க வேண்டும். ஒழுக்கமான நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துவிட்டார். சிவகார்த்திகேயன் நல்ல பையன். 40 முதல் 50 வருடங்கள் நீங்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என சாபம் விடுகிறேன்” என்று தெரிவித்தார். மிஷ்கின் விட்ட சாபம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. கடவுளே அந்த சாபம் கண்டிப்பாக பலிக்க வேண்டும் என்கின்றனர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here