‘மாமன்னன்’ திரைப்படத்தின் வெற்றிய அப்படக்குழு மீண்டும் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய வெற்றி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடியதுடன், படத்தின் வெற்றிக்காக இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.

கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்நிலையில் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், கிர்திகா உதயநிதி, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் இருந்தனர். இதுதொடர்பான வீடியோவை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here