அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகும் மிஸ்டர் X திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

நல்ல வரவேற்பு

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை மஞ்சு வாரியர், அசுரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானார். நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் தனித்துவமாக இருந்து வருகிறார் மஞ்சு வாரியார். வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்த பிறகு தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகள் கழித்து ‘துணிவு’ படத்தில் நடித்தார். அஜித் குமாருடன் இணைந்து நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

திரில்லர் படம்

இந்நிலையில், எப்.ஜ.ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் படத்திற்கு மிஸ்டர்.X என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். அதிரடியான ஆக்ஷன் ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here