லியோ படத்தின் “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே லியோ படத்தின் மீது உள்ள ஹைப் காரணமாக ரசிகர்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2வது போஸ்டர்

லியோ படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து ‘நா ரெடி’ பாடலின் புரோமோ வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக அப்டேட்டுகள் வருவதால் ரசிகர்கள் உற்சாத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here