விஜய்யின் லியோ படத்தில் பிரேமம் பட புகழ் மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக தகவல் வெளியாகியூள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து இப்படத்தின் மீது உள்ள ஹைப் காரணமாக ரசிகர்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரேமம் நடிகை

லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் இரண்டு மாதங்களாக நடைபெற்றது. ஷூட்டிங் முடித்து திரும்பிய பட குழுவினர் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரேமம் படம் புகழ் நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here