திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் யாஷூடன் சேர்ந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

திரையுலகில் சாதனை

சின்னத்திரை, வெள்ளித்திரை, வெப் தொடர்கள் என்று பிசியாக இருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இந்திய படவுலகில் ஆரம்ப கட்டத்திலிந்து பல பிரச்சனைகளை சமாளித்து வந்த ரம்யா கிருஷ்ணன், தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே கட்டமைத்து வைத்துள்ளார். படையப்பா படத்தில் நீலாம்பரியாக வந்து அசத்திய ரம்யா கிருஷ்ணனை யாராலும் மறக்க முடியாது.

வைரல் வீடியோ

இதனிடையே, ரெபல் ஸ்டார் அம்பரீஷ் – நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக்கின் திருமணம் கடந்த வாரம் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த திருமண விழாவில் கன்னட நடிகர் யாஷ் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை ரம்யா கிருஷ்ணனும், யாஷுடன் இணைந்து கன்னட பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here