நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அதனைதொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் அவர் கலந்துகொண்டார். கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நிஷாவை திருமணம் செய்துகொண்டார். நிஷா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மிக அழகிய நட்சத்திர ஜோடியான இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்நிலையில், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக நடிகை நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை பார்த்த பிரபலங்கள் பலர், கணேஷ் வெங்கட்ராமன் – நிஷா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here