ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்திய 2 படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல போராட்டங்கள்

1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 இயக்கும் பணியை தொடங்கிய ஷங்கருக்கு பல பிரச்சனைகள் வந்தது. பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை முடிக்கும் வேலையில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தியன் 2 படத்தில் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சின்கா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இயக்குநர் ஷங்கர் தனது டீமை வேலை வாங்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அதன் அடுத்த கட்டமாக நடிகர் கமலஹாசன் சண்டை பயிற்சி குழுவினருடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது.

வில்லன்?

இந்நிலையில், இந்திய 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் படப்பிடிப்பு பகுதியை நிறைவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here