நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிப் படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அவர், அதைதொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, பத்து தல, திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

வைரல் புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வரும் பிரியா, ஹோட்டல் தொழிலிலும் இறங்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பதற்காக சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியா பவானி சங்கர், அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வரைலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here