இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர்

‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமான இளையராஜா, இன்று இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேரில் வாழ்த்து

இந்நிலையில், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவகத்திற்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் உடன் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here