நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

சிறந்த படம்

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் சரத்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது சரத்குமார், அசோக் செல்வன் இணைந்து நடித்த ‘போர் தொழில்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

நாங்கள் வரவேற்போம்

இதில் கலந்துகொண்டு நடிகர் சரத்குமார் பேசுகையில், “இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். ஆனால் இந்த படத்தின் கதையை இயக்குநர் சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது. இதுபோன்று யாரும் கதை சொன்னது கிடையாது என்பதை சொல்லியே ஆக வேண்டும்” என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமாரிடம், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் வந்தால் அவரை வரவேற்போம் என்று பதில் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here