நடிகை சைத்ரா ரெட்டி கர்ப்பமாக இருக்கும் தனது தோழி நட்சத்திராவை தொல்லை செய்யும் வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் பிரபலங்கள்

ஜீ தமிழில் யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்திருந்தவர் நட்சத்திரா விஸ்வநாதன். யாரடி நீ மோகினி தொடரில் நட்சத்திரா விஸ்வநாதன் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நட்சத்திராவுக்கு, கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. விஷ்வா என்பவரை திருமணம் செய்துகொண்ட நட்சத்திரா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் நட்சத்திராவுக்கு வளைகாப்பு நடந்த முடிந்தது. தனது வளைகாப்பு புகைப்படத்தையும், வீடியோவையும் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

தொல்லை செய்யும் தோழி

இந்நிலையில் இவரது நெருங்கிய தோழியான நடிகை சைத்ரா ரெட்டி, நட்சத்திராவிற்கு தொல்லை செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சைத்ராவை சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். “என்னதான் நீங்க தோழியாக இருந்தாலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில் அவரை இப்படி தொல்லை செய்யக்கூடாது” என்று கமெண்டுகள் மூலம் வறுத்து எடுத்து வருகின்றனர். இந்த வீடியோவை இருவரும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கடுப்பில் நெட்டிசன்ஸ்

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நட்சத்திரா செய்யும் அனைத்தையும் சைத்ரா இமிடெட் செய்து மிகவும் தொல்லை கொடுப்பது போல அமைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அந்த வீடியோவின் முடிவில் படுத்து கொண்டிருக்கும் நட்சத்திரா மீது சைத்ரா காலை தூக்கி போடுகிறார். இதனால் கடுப்பாகும் நட்சத்திரா தலையணையை கொண்டு சைத்ராவை வெளுத்து வாங்குகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி இப்படி செய்யாதீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here